தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 7:24 PM IST (Updated: 29 Sept 2021 7:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொலை வழக்கு
தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் ராஜாபாண்டி என்ற பாண்டி (வயது 21), தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் என்ற முத்துப்பாண்டி (21), தூத்துக்குடி கிருபை நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (22), தூத்துக்குடி திரு.வி.க நகரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் பாரத் விக்னேஷ்குமார் என்ற பாரத் (22) ஆகிய 4 பேரும் சிப்காட் போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று, பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தமிழ்ச்செல்வன் (29) என்பவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் திருச்செந்தூர் போலீசாரும், சாயர்புரம் சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த தொம்மை பொன்ராஜ் பக்கிஸ்குமார் (26) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக சாயர்புரம் போலீசாரும் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ராஜபாண்டி என்ற பாண்டி, முத்துக்குமார் என்ற முத்துப்பாண்டி, ராகுல், பாரத் விக்னேஷ்குமார் என்ற பாரத், தமிழ்ச்செல்வன், பக்கிஸ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.


Next Story