அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நாளை உள்ளிருப்பு போராட்டம்
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நாளை உள்ளிருப்பு போராட்டம்
குன்னூர்
குன்னூர் அருகேயுள்ள அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடி மருத்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 1902-ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் பெண்கள் உட்பட 1900 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான போர் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வெடிமருந்து தொழிற்சாலை உட்பட இந்தியாவிலுள்ள 41 பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளைபொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.இந்த முடிவுக்கு தொழிற்சங்க சம்மேளனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் நாளை மத்திய அரசு பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளை பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றும் உத்தரவை வெளியிடுகிறது.
இதனை எதிர்த்து வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள 2 தொழிற்சங்கங்கள் நாளை கருப்பு தினமாக கடைபிடித்து மதிய உணவு புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து சி.எப்.எல்.யு.தொழிற்சங்க தலைவர் ரவி, பொது செயலாளர் ஹரிஹரசுப்பிரமணி ஆகியோர் கூறியதாவது:-
கார்கில் போரின் போது வெடிமருந்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட போர் தளவாடங்கள் நேரடியாக ராணுவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் அந்த போரில் நாம் வெற்றி பெற்றோம். இதனைதொடர்ந்து ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை தங்கு தடையின்றி உற்பத்தி செய்து வந்தோம்.
இந்த நிலையில் மத்திய அரசு தன்னிச்ைசயாக வெடிமருந்து தொழிற்சாலை உட்பட 41 பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளை 7 பொதுத் துறை நிறுவனங்களாக பாதுகாப்பு பொது செக்டார் யூனிட் என்ற பெயரில் மாற்றியுள்ளது.
கால போக்கில் இந்த தொழிற்சாலைகள் தனியார்மயமாக்கப்படும் அபாயம் உள்ளது. பொது துறை நிறுவனங்களாக மாற்றும் அதிகாரபூர்வ உத்தரவு நாளை 1-ந் தேதி வரவுள்ளது.
அன்றைய தினம் இதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு தினம் அனுஷ்டித்து தொழிலாளர்கள் மதிய உணவை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story