சின்ன வெங்காயம் விலை உயர்வு


சின்ன வெங்காயம் விலை உயர்வு
x
தினத்தந்தி 29 Sept 2021 9:43 PM IST (Updated: 29 Sept 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

நத்தக்காடையூர் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

த்தூர்
நத்தக்காடையூர் வாரச்சந்தையில்  சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சின்ன வெங்காயம் 
 நத்தக்காடையூர் கடைவீதியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் நத்தக்காடையூர் பழையகோட்டை குட்டப்பாளையம் மருதுறை பாப்பினி முள்ளிப்புரம் பரஞ்சேர்வழி ஆகிய வருவாய் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள்  ஒரு வாரங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், கீரை வகைகள் பழ வகைகள் ஆகியவற்றை வாங்கி செல்வார்கள். 
இந்த  வாச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை விலை சற்று உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.25 க்கு விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த வாரத்தை விட ரூ.5 அதிகம் ஆகும். 
இதுபற்றி சந்தை வியாபாரிகள் கூறியதாவது
அழுகல்
 திருப்பூர், ஈரோடு உட்பட ஒரு சில மாவட்டங்களில் மழை
பெய்ததன் காரணமாக சின்ன வெங்காயம் நனைந்து அழுகல் அடைந்து விடுவதால் சின்ன வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளின் வயல்களில் விளையும் சின்ன வெங்காயம் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படுவது இல்லை.
ஆனால் அதற்கு மாற்றாக விவசாயிகள் பாதுகாப்பான வேளாண் விளைபொருட்கள் பட்டறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்யும்போது கிலோவிற்கு ரூ. 2 வரை கூடுதலாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 25 க்கு விற்பனை செய்யப்படுகிறது இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story