பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
பழனியில் முருக பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருநங்கைகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பழனி பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசுகையில், படித்த தகுதியான திருநங்கைளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் நலவாரியம் மூலம் சுயதொழில்களுக்காக வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும். படிக்க விருப்பம் உள்ள திருநங்கைகளுக்கு, அதற்கான வசதி ஏற்படுத்தி தரப்படும்.
பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம், பஸ்நிலையம் மற்றும் அடிவாரப்பகுதிகளில் நின்று கொண்டு திருநங்கைகள் கட்டாய பண வசூலில் ஈடுபட்டோலோ, பணம் பறித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story