சிறுவனிடம் சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு


சிறுவனிடம் சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
x
தினத்தந்தி 29 Sept 2021 11:51 PM IST (Updated: 29 Sept 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

சிறுவனிடம் சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர்,
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது சண்முகவேல் (வயது 43) என்பவர் அந்த சிறுவனிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து, அந்த சிறுவன் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.
இதனைதொடர்ந்து அவர்கள் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சண்முகவேலை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story