தர்மபுரியில் பரபரப்பு 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 74 வயது முதியவர் கைது


தர்மபுரியில் பரபரப்பு 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 74 வயது முதியவர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 11:56 PM IST (Updated: 29 Sept 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுதொடர்பாக 74 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தர்மபுரி:
7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுதொடர்பாக 74 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
போலீசில் புகார்
தர்மபுரியை சேர்ந்த 7 வயது சிறுமி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து பெற்றோர் சிறுமியை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 
சிறுமியின் பெற்றோர் வேலைக்கு செல்வதால் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளாள். அப்போது 10 வயது சிறுவன் விளையாடுவதற்காக அந்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளான்.
பாலியல் பலாத்காரம்
வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை கவனித்த அதேபகுதியை சேர்ந்த பச்சியப்பன் (வயது 74) என்பவர் சிறுவனுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து வீட்டிற்கு வெளியே யாரும் வருகிறார்களா? என பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ளார். 
பின்னர் தனியாக இருந்த அந்த சிறுமியை, அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதை வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இதைக் கவனித்த இன்னொரு சிறுவன்(13) அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
வழக்குப்பதிவு
கடந்த 3 மாதங்களாக இந்த சம்பவம் நடந்து வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது. இதுதொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் பச்சியப்பன், 13 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாக 10 வயது சிறுவன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக முதியவரை மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
7 வயது சிறுமியை 74 வயது முதியவர், 13 வயது சிறுவன் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story