மோட்டார் சைக்கிள் விபத்தில் தப்பிய மின்வாரிய அதிகாரி கார் மோதி பலி ராயக்கோட்டை அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் தப்பிய மின்வாரிய அதிகாரி கார் மோதி பலி ராயக்கோட்டை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 29 Sept 2021 11:56 PM IST (Updated: 29 Sept 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருந்து தப்பிய மின்வாரிய அதிகாரி, கார் மோதி பலியானார்.

ராயக்கோட்டை:
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருந்து தப்பிய மின்வாரிய அதிகாரி, கார் மோதி பலியானார்.
ராயக்கோட்டை அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மின்வாரிய அதிகாரி
மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தங்கி இருந்து உத்தனப்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று ஓசூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராயக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும், முருகன் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
கார் மோதி பலி
அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்த முருகன் மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த செயற்பொறியாளர் முருகனை சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதற்குள் முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முருகனுக்கு சுஜாதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் தப்பிய மின்வாரிய அதிகாரி, கார் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story