உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீஸ் கொடி அணிவகுப்பு
உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீஸ் கொடி அணிவகுப்பு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் நேற்று ராணிப்பேட்டையில், போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக வந்து, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, பயிற்சி துணை சூப்பிரண்டு தனுஷ்யா, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story