உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று சமூகபணி மேற்கொள்ள ேவண்டும். சீமான் பேச்சு
ஊழல் ஆட்சிக்கு எதிராக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று சமூக பணியாற்ற வேண்டும் என்று சீமான் பேசினார்.
ஜோலார்பேட்டை
ஊழல் ஆட்சிக்கு எதிராக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று சமூக பணியாற்ற வேண்டும் என்று சீமான் பேசினார்.
அறிமுக கூட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த அறிமுக கூட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
சமூகப்பணி
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு தம்பி, தங்கை, சொந்தங்கள் தனித்து போட்டியிடுகின்றனர். பணபலம், அதிகார பலம் உள்ளிட்டவைகளை கடந்து நாம் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நல்லாட்சி அமைக்க ஊராட்சிகளில் நாம் தமிழர் சொந்தங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் வீடு வீடாக சென்று மக்களிடத்தில் வாக்கு சேகரித்து வெற்றிபெற்று நல்ல ஒரு சமூகப் பணியை மேற்கொள்ள வேண்டும். 100 நாள் திட்ட பணிகளை தமிழக அரசு முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட, ஒன்றிய, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story