மகன்-மருமகள் திருட்டு வழக்கில் கைதானதால் முதியவர் தற்கொலை


மகன்-மருமகள் திருட்டு வழக்கில் கைதானதால் முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2021 12:56 AM IST (Updated: 30 Sept 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

மகன்-மருமகள் திருட்டு வழக்கில் கைதானதால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார

செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவரது வீட்டின் ஓட்டை பிரித்து கடந்த மாதம் 28-ந் தேதி நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த கணவன்-மனைவியான பழனிச்சாமி, லட்சுமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த நகை பணத்தை மீட்டதோடு அவர்களை சிறையில் அடைத்தனர். இதனை அறிந்த பழனிச்சாமியின் தந்தை ரெங்கசாமி (வயது 70), தனது மூத்த மருமகள் ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் நிலையில் இளைய மருமகள் மற்றும் இளைய மகன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் அங்குள்ள ஒரு மரத்தில் நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெங்கசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், திருட்டு வழக்கில் மகன் மற்றும் மருமகள் கைது செய்யபட்டதால் மன உளைச்சலில் இருந்த ரெங்கசாமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story