கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை பல்கலைக்கழகத்தில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை எளிய மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் நுழையும் வகையில் கல்வி கட்டணத்தை சீரமைக்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். 2 ஆண்டு கால ஆராய்ச்சி படிப்பிற்கு 3-வது ஆண்டு கட்டணம் கண்டிப்பாக செலுத்த வேண்டிய நடைமுறையை மாற்ற வேண்டும். தொற்று காலத்தில் தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி அறிக்கையை 6 மாத காலம் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் கால அவகாசம் அளித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வாயில் முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் சிவஞானம், பொருளாளர் கோமதிநாயகம், துணைத் தலைவர் ராஜசேகரன் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story