10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
திருச்சி, செப்.30-
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அருண் (வயது 17). இவர் ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது தந்தையிடம் புதிய செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, பழனி தற்போது வருமானம் இல்லை. வருமானம் வரும் போது புதிய செல்போன் வாங்கித் தருகிறேன். தற்சமயத்துக்கு பழைய செல்போனை வைத்துக் கொள் என்று கொடுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அருண் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story