சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் சுவரொட்டி பிரசுரிக்க கூடாது
சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் சுவரொட்டிகள் பிரசுரிக்கக்கூடாது என்று அச்சக உரிமையாளர்களுக்கு சப்-கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி, செப்.30-
சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் சுவரொட்டிகள் பிரசுரிக்கக்கூடாது என்று அச்சக உரிமையாளர்களுக்கு சப்-கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் குறித்து அச்சக உரிமையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் கந்தசாமி (வடக்கு) தலைமை தாங்கினார். தாசில்தார் மகாதேவன் முன்னிலை வகித்தார். அச்சக உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளில் அச்சக உரிமையாளர்கள் தங்களின் பெயர், அலுவலக முகவரியை கண்டிப் பாக குறிப்பிட வேண் டும். இணைப்பு படிவத்தில் வேட்பாளர் உறுதிமொழி, அச்சக உரிமையாளர்கள் உறுதிமொழியுடன் சுவரொட்டி, துண்டு பிரசுரத்தை இணைத்து பிரசுரங்கள் பதிவிட்ட 3 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை
பிரசுரங்களில் சாதி, மதம், இனம் ஆகியவற்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் நடைபெறாத வகையில் இருக்க வேண்டும். இதனை மீறும் அச்சக உரிமையாளர்கள் மீது புதுச்சேரி நகராட்சி சட்டம் 1973-ன் படி சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
____
Related Tags :
Next Story