பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: கொளத்தூர் மணி உள்பட 5 பேர் கோர்ட்டில் ஆஜர்
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கொளத்தூர் மணி உள்பட 5 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்
சேலம்
கடந்த 2013-ம் ஆண்டு சேலம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, அருள்குமார், கிருஷ்ணன், டேவிட் உள்பட 5 பேர் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக கொளத்தூர் மணி உள்பட 5 பேர் சேலம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, வருகிற 28-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story