பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் மகன்


பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் மகன்
x
தினத்தந்தி 30 Sept 2021 3:40 PM IST (Updated: 30 Sept 2021 3:40 PM IST)
t-max-icont-min-icon

பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வழிபாடு செய்த சம்பவம் மணலியில் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி பஸ் நிலையம் எதிரே உள்ள ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை ராமதாஸ்.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த அவர், கடந்த 40 வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இவரது தாய் சிவகலை (85). இந்த தம்பதிக்கு 10 மகன்கள், 3 மகள்கள் என 13 பிள்ளைகள் உள்ளனர். பெற்றோர் சிரமப்பட்டு 13 பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு சிவகலை மரணமடைந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிவகலைக்கு 13-வது மகனான சரவணன், தனது தாய் மீது உள்ள பாசத்தால் கோவில் கட்டி அதில் தாயின் சிலை வைக்க முடிவு செய்தார்.இதனையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சிற்பக்கலைஞரிடம் சுமார் 1 லட்சம் செலவில் தாயின் மார்பளவு சிலையை செதுக்க ஆர்டர் கொடுத்து பெற்றுள்ளார்.

இதையடுத்து, வீட்டின் முன்பக்கத்தில் கோவில் கட்டி அதில் தனது தாயின் சிலையை வைத்து சரவணன் பிரதிஷ்டை செய்துள்ளார். தற்போது சிலையாக வைக்கப்பட்டுள்ள சிவகலைக்கு பேரன், பேத்தி, கொல்லு பேரன், கொல்லு பேத்தி என 70 பேர் உள்ளனர்.நினைவு தினமான நேற்று அவரது நினைவு தினத்தில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பால் அபிஷேகம் செய்து, படையலிட்டு மகிழ்ந்தனர். பெற்ற தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் ஒரு சில மனிதர்களுக்கு மத்தியில் பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வழிபாடு செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story