ரெயில் நிலையங்களில் சங்கிலி, செல்போன் பறிப்பு வழக்கில் ஆந்திர வாலிபர் கைது


ரெயில் நிலையங்களில் சங்கிலி, செல்போன் பறிப்பு வழக்கில் ஆந்திர வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 4:26 PM IST (Updated: 30 Sept 2021 4:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பெண் ஒருவரின் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்று விட்டார். இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகையும், மாம்பலம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளின் செல்போன்களையும் மர்மநபர் பறித்து சென்றது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவா (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை ரெயில்வே போலீசார், அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 3¾ பவுன் நகை, 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story