தூத்துக்குடியில் போலீஸ் குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடியில் போலீசார் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று நடந்த போலீசார் குறைதீர்க்கும் முகாமில் 113 போலீசார் கொடுத்த மனுக்களை வாங்கி சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.
குறைதீர்க்கும் முகாம்
தமிழக முதல்-அமைச்சர் துறைரீதியாக அலுவலர்களின் குறைகளை தீர்ப்பதற்காக உங்கள் துறையில் முதல்-அமைச்சர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி போலீஸ் துறையில் போலீசாருக்கான குறைதீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் துறையில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
113 பேர்
முகாமில், ஆயுதப்படை, அனைத்து போலீஸ் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் அனைத்து போலீஸ்காரர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை மொத்தம் 113 பேர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அவர்களிடம் மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து நேரில் அவர் விசாரணை நடத்தினார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், ‘போலீசாரின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனு கொடுத்தவர்களுக்கு தனித்தனியாக எழுத்து மூலமாக பதில் கொடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
முகாமில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், மாவட்ட போலீஸ் அலுவலக நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் அலுவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story