இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2021 6:02 PM IST (Updated: 30 Sept 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் அருகே கணவனின் செக்ஸ் தொந்தரவால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குன்னத்தூர்
குன்னத்தூர் அருகே கணவனின் செக்ஸ் தொந்தரவால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
இளம்பெண்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் பிரபு வயது 26. ‌அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில்  நவக்காடு ஊராட்சி ஒருக்காம்பாளையத்தை சேர்ந்த நந்தினி என்கிற பானுப்பிரியா 23 என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஈஸ்வரி  திவ்யா  என 2 குழந்தைகள் உள்ளனர். 
திருமணத்திற்கு பின்னர் பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலை முடிந்ததும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் நந்தினி கணவருடன் கோபித்துக்கொண்டு அவ்வப்போது குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விடுவார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபு மது குடித்து விட்டு வந்து நந்தினியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் நந்தினி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு ஒருக்காம்பாளையம் சென்று தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். 
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் நந்தினி படுத்து தூங்கினார். பிரபுவும் மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார். நள்ளிரவு நேரம் நந்தினியின் மகள் ஈஸ்வரி தூக்கத்தில் விழித்து எழுந்தாள். அப்போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அந்த குழந்தை அழுது கொண்டே தாயின் காலை அங்கும் இங்கும் ஆட்டியுள்ளது. ஆனால் நந்தினி இறந்து விட்டார் என்று குழந்தைக்கு தெரியாததால், அந்த குழந்தை வீட்டிற்கு வெளியே வந்து நள்ளிரவு நேரம் அழுது கொண்டே இருந்தது. மதுபோதையில் இருந்ததால் பிரபு எழுந்திருக்கவில்லை.
நள்ளிரவுநேரத்தில் நீண்ட நேரமாக குழந்தை அழுகுரல் கேட்கிறதே என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எழுந்து சந்தேகத்தின் பேரில் வெளியே வந்து பார்த்தனர். அப்போது குழந்தை ஈஸ்வரி அழுது கொண்டே நின்றதால், அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு நிர்வாண நிலையில் நந்தினி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
 இதுபற்றி குன்னத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் அம்பிகா சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து, நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் நந்தினிக்கு தொடர்ந்து பிரபு  செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக நந்தினியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து பிரபுவிடமும், அவரது தந்தையிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நந்தினிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.   


---
 நந்தினி

Next Story