உறுதிமொழி எடுத்த மாணவிகள்


உறுதிமொழி எடுத்த மாணவிகள்
x
தினத்தந்தி 30 Sept 2021 6:40 PM IST (Updated: 30 Sept 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டசத்து மாத விழாவையொட்டி மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

திண்டுக்கல்:

ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி திண்டுக்கல்லில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஊட்டச்சத்து பழங்கள், உணவுகள் குறித்து கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும் ஊட்டச்சத்து குறித்து அரசு அலுவலகம், பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கம் சார்பில் பள்ளி மாணவிகள் மற்றும் தேக்வாண்டோ வீராங்கனைகள் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

 நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி பங்கேற்று ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பேசினார். பின்னர் ஊட்டச்சத்து குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தேக்வாண்டோ பயிற்சியாளர் ஜோதிபாசு, பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story