அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு விழிப்புணர்வு முகாம்
போலீஸ் துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேடசந்தூர்:
போலீஸ் துறை சார்பில், வேடசந்தூர் அருகே உள்ள கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான தற்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
ஆசிரியர்கள் செந்தில்வடிவு, முனியப்பன், முருகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்றார்.
முகாமில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா கலந்து கொண்டு மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் ஆபத்தான நேரங்களில், மாணவிகள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விளக்கம் அளித்தார். முகாமில் தற்பாதுகாப்பு பற்றி செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
முகாமில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து வகுப்பு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story