குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூடல்
கூடலூரில் அலுவலருக்கு கொரோனா உறுதியானதால் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூடப்பட்டது.
கூடலூர்
கூடலூரில் அலுவலருக்கு கொரோனா உறுதியானதால் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூடப்பட்டது. மேலும் 2 பள்ளி மாணவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு கொரோனா
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செம்பால் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மூடப்பட்டது.
இதேபோன்று செவிடிப்பேட்டை பகுதியில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த அலுவலகத்துக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அலுவலகம் மூடல்
பாதிக்கப்பட்ட அலுவலர், அரசு கருவூலத்துக்கு சென்று வந்ததால், அங்கும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூடப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காமல் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல், தடுப்பூசி முறையாக செலுத்தி கொண்டால் மட்டுமே பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story