பழங்குடியின மக்கள் வாழ்ந்த கல்திட்டைகள் பாதுகாக்கப்படுமா?


பழங்குடியின மக்கள் வாழ்ந்த கல்திட்டைகள் பாதுகாக்கப்படுமா?
x
தினத்தந்தி 30 Sept 2021 7:33 PM IST (Updated: 30 Sept 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்த கல்திட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதியில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின ஆதிவாசி மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் தங்குவதற்காக கல்திட்டைகளை உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற கல்திட்டைகள், கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் ஏராளமான இடங்களில் உள்ளன.
குறிப்பாக கொடைக்கானல் பேத்துப்பாறையில் கல்திட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. 

இதனை அங்குள்ள மக்கள் பராமரித்து வருகின்றனர். அதேநேரத்தில் வனவிலங்குகள் மற்றும் பொதுமக்கள் அருகே சென்று பார்ப்பதன் காரணமாக கல்திட்டைகள் சேதம் அடைந்து வருகின்றன.
மேலும் கல்திட்டைகள் உள்ள இடத்தில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

 இதற்கான கட்டணத்தையும் அப்பகுதி மக்களே செலுத்தி வருகின்றனர். எனவே கொடைக்கானல் கீழ்மலை பகுதியில், பழங்குடியின மக்கள் வாழ்ந்த கல்திட்டைகளை பராமரித்து, பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Next Story