எட்டயபுரம் அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி


எட்டயபுரம் அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 30 Sept 2021 8:44 PM IST (Updated: 30 Sept 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் லாரி டிரைவர் பலியானார்

எட்டயபுரம்:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் மாரிமுத்து (வயது 25). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியை ஓட்டிச்சென்றார். அப்போது எட்டயபுரம் அருகே வெம்பூர் பகுதியில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் மாரிமுத்து ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மாரிமுத்து இடிபாடுகளில் சிக்கி பலியானார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story