வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்


வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 30 Sept 2021 8:51 PM IST (Updated: 30 Sept 2021 8:51 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

பெரும்பாறை:

பெரும்பாறை அருகே உள்ள ஆடலூர், கே.சி.பட்டி, சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 10 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. 

இந்தநிலையில் நேற்று காலை ஆடலூர் பகுதியில் 10 யானைகள், அங்குள்ள காபி தோட்டங்களுக்குள் புகுந்தன. பின்னர் அவை, தோட்டத்தின் முள்வேலியை உடைத்து சேதப்படுத்தின. 

மேலும் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை நாசப்படுத்தின. 

இதுமட்டுமின்றி ஆடலூர் சோலைக்காடு பிரிவில், கல்யாணசுந்தரம் என்பவரின் தோட்டத்தில் உள்ள வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

 கதவுகளை உடைத்த காட்டு யானைகள் வீட்டில் உள்ள மின்சார வயர்களையும் நாசப்படுத்தின. அதன்பிறகு காட்டு யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. 

பெரும்பாறை அருகே காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story