வேலூர் மாவட்டத்தில் கையடக்க கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கை


வேலூர் மாவட்டத்தில் கையடக்க கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கை
x
தினத்தந்தி 30 Sept 2021 10:22 PM IST (Updated: 30 Sept 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

கையடக்க கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கை

வேலூர்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை, நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தினமும் வாகன தணிக்கை செய்து வருகிறார்கள். அப்போது மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டும் நபர்கள், போக்குவரத்து விதியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் தணிக்கையில் மோட்டார் சைக்கிள் திருடிய நபர்களை போலீசார் கைது செய்கிறார்கள். 

போக்குவரத்து விதியை மீறும் நபர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் சமயத்தில் சிலநேரத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அப்போது இருவருக்கும் நடக்கும் உரையாடலை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து, அதனை திருத்தம் செய்து போலீஸ் மீது குற்றம் இருப்பது போன்று சித்தரித்து சமூகவலைதளத்தில் பரப்பும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதனை தவிர்க்கவும், வாகன சோதனையின்போது யாராவது வாக்குவாதம் செய்தால் அதனை பதிவு செய்யவும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தலா 3 கையடக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தங்கள் தோளில் பொருத்தி வாகன தணிக்கையில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வேலூர் தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கையடக்க கேமராவுடன் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


Next Story