கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள மத்திய கால கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
ரபி பருவத்திற்கான சிட்டா, அடங்கல் வழங்கவும், காப்பீடு செய்வதையும் கடன் வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திரண்டு வந்தனர்.
அனுமதி மறுப்பு
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளிடம், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. ஆகவே நீங்கள் அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் தான் போராட்டம் நடத்த முடியும். ஆகவே நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்றனர். அதற்கு அவர்கள், மற்ற மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு தான் போராட்டம் நடக்கிறது. எங்க ளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் மஞ்சக் குப்பம் கார் நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்தினால், அதற்கு அனுமதி தருவோம் என்று போலீசார் தெரி வித்தனர். இதை கேட்ட அவர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் புறப்பட்டு கார் நிறுத்தம் அருகில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாயி கள் சங்க நிர்வாகிகள் கண்ணன், அன்பழகன், லட்சுமிகாந்தன் மற்றும் கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story