தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத மின்விளக்குகளை மாற்ற வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் பஸ் நிலையம் அருகில் இருக்கும் உயர்மின் கோபுர விளக்குகளில் 2 எல்இடி பல்புகள் மட்டுமே எரிகிறது. மற்றவை எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த எல்இடி பல்புகளை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.
மருதுபாண்டியன், மேலப்புலியூர், பெரம்பலூர்.
கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சி ஆலங்கண்மாய் பகுதியில் இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் மழை பெய்யும்போது அதில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபால், ஆலவயல், புதுக்கோட்டை.
அரசு பஸ் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், வாகவாசல் வட்டம் , வடுகம் பட்டி, வடசேரி பட்டி, இடையப்பட்டி, ராஜப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் சென்று வர அரசு பஸ் போக்குவரத்து இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட ஊர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
பாலமுருகன், இடையப்பட்டி, புதுக்கோட்டை.
குளம்போல் காட்சி அளிக்கும் கழிவுநீர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கே.பள்ளிவாசல் ஊராட்சி மெய்யபுரம் கிராமத்தில் கோவில் தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் முன்பு கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம மக்கள், மெய்யபுரம், புதுக்கோட்டை.
குண்டும், குழியுமான தார்ச்சாலை
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயகாந்தன், அம்பேத்கர்நகர், பெரம்பலூர்.
குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து சென்று சேதப்படுத்துகின்றன. மேலும் அப்பகுதி மக்களை கடிக்க வருவது போல் அச்சுறுத்தி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும்.
பொதுமக்கள், கீழப்பழுவூர், அரியலூர்.
தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணை முன் காவிரி வலது கரையில் இருந்து பிரிந்து வரும் காவிரி ஆற்றின் நீர் கட்டளை மேட்டு வாய்க்கால் மாயனூர் முதல் தாயனூர் வரை சென்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இந்த நிலையில் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய ஏற்ற வகையில், வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணியன், கவுண்டம்பட்டி, கரூர்.
பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி
கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, ஆர்.டி.மலை அருகே உள்ள அழகாபுரி பகுதியில் ஏராளமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து நாயக்கர் தோட்டம் பஸ் நிறுத்தம் வரை தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அழகாபுரி, கரூர்.
பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியாபுரத்தில் இருந்து வைரிசெட்டிப்பாளையம் வழியாக பெரியசாமி கோவிலுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இப்பகுதியில் போதிய சாலை வசதி இருந்தும் பஸ் வசதி இல்லை. இதனால் ஏரிக்காடு, பசலிக்கோம்பையில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எழில்குமரன், வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.
சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்கள்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கிழகாரைக்காடு முதல் தொட்டியபட்டி வரை செல்லும் சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் பணி நடைபெறாமல் அப்படியே உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி.
தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள மில்ட்ரி காலனி 8-வது தெருவில் இருந்து ராஜுவுகாந்தி நகர், இந்திராகாந்தி நகர் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை பாதாள சாக்கடை பணியின்போது தோண்டப்பட்டு பல மாதங்களாக சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், திருச்சி.
பாதாள சாக்கடை மூடி வழியாக வெளியேறும் கழிவுநீர்
திருச்சி 55 வார்டு உறையூர் வாணிய செட்டித் தெருவில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்ட அதன் மூடி வழியாக கழிவுநீர் வெளியே வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, உறையூர், திருச்சி.
குப்பைகளை சேகரிக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், திருவாணைக்காவல் அகிலா நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகள் தேங்குகிறது. இதனை குப்பைகளை சேகரிப்பவர்கள் வாங்கிசெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமணி, அகிலா நகர், திருச்சி.
சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள்
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதி 58வது வார்டு, சாலைகளில் ஏராளமான ஆடு, மாடு, குதிரை போன்றவை சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்பவர்கள் தங்களை மாடுகள் முட்டிவிடுமோ என்ற அச்சத்திலேயே அப்பகுதியை கடந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபு, உறையூர், திருச்சி.
அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் தேவை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கரட்டாம்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதன் அருகே மழைநீரை சேகரிக்கும் வகையில் நீர்த்தேக்க குட்டை உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே அன்கன்வாடியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தன், கரட்டாம்பட்டி, திருச்சி.
கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பம்
திருச்சி மாவட்டம், பீம நகர், புது ரெட்டி தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில், அப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வள்ளியம்மாள், பீமநகர், திருச்சி.
Related Tags :
Next Story