கரும்புச்சக்கை தூள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
கரும்புச்சக்கை தூள் ஏற்றி வந்த லாரி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
நொய்யல்,
சின்ன சேலத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் இருந்து கரும்புச்சக்கை தூள்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூரில் செயல்பட்டுவரும் காகித ஆலைக்கு ஒரு லாரி புறப்பட்டு சென்றது. இந்த லாரியை சின்னசேலத்தை சேர்ந்த குமார் (வயது 42) ஓட்டி வந்தார். சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்புச்சக்கை தூள் நடுரோட்டில் கொட்டி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரியின் பின்னால் எந்த வாகனமும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரி ஓரமாக நிறுத்தப்பட்டது. மேலும், நடுரோட்டில் கொட்டிக் கிடந்த கரும்புச்சக்கை தூள்களை ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story