மாங்காய் விளைச்சல் அமோகம்


மாங்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 30 Sept 2021 11:24 PM IST (Updated: 30 Sept 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

மாங்காய் விளைச்சல் அமோகம்

கிருஷ்ணகிரி, அக்.1-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாங்காய் விளைச்சல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, சந்தூர், மத்தூர், ஜெகதேவி, ஊத்தங்கரை, பர்கூர், வரட்டனப்பள்ளி, வேப்பனபள்ளி, காவேரிப்பட்டணம், சாப்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மா விளைச்சல் சீசனின் போது, கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களால், மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பல மாங்கூழ் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் மாங்காய் விற்பனை முற்றிலும் குறைந்ததால், விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
விளைச்சல் அதிகரிப்பு
தற்போது மறுகாப்பு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேப்பனப்பள்ளி அருகே உள்ள அத்திகுண்டா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறுகாப்பு மாங்காயை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, விவசாயி சபியுல்லா கூறுகையில், எனது மூன்று ஏக்கர் மாந்தோப்பில் 30 டன் மறு காப்பு மாங்காய்கள் விளைந்துள்ளன. டன் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் விலை கிடைக்கிறது. மாமரத்தை பராமரிப்பது, மருந்து அடிப்பது, டிராக்டர் கொண்டு தண்ணீர் விடுவது உள்ளிட்ட செலவுகளுக்கு இடையே ஓரளவிற்கு இம்முறை லாபம் கிடைத்துள்ளது. வருடந்தோறும் மா சீசனில் விளையும் மாங்காய்களை விட, இடைப்பட்ட காலத்தில் விளையும் இந்த மறுகாப்பு மாங்காய்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.

Next Story