பெற்றோரை புதைத்த இடத்தில் வாலிபர் தற்கொலை


பெற்றோரை புதைத்த இடத்தில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2021 11:24 PM IST (Updated: 30 Sept 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோரை புதைத்த இடத்தில் வாலிபர் தற்கொலை

காவேரிப்பட்டணம், அக்.1-
காவேரிப்பட்டணம் அருகே பெற்றோரை புதைத்த இடத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலி தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன், அவருடைய மனைவி சாந்தாமணி. இவர்களுக்கு ரவீந்திரன் (28), சூர்யா (26) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் சூர்யாவுக்கு திருமணம் ஆகி விட்டது. ரவீந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை.
இதனால் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி ரவீந்திரன், பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்தார். இதில் மனம் உடைந்த ரவீந்திரனின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டனர்.
சுடுகாட்டில் தற்கொலை
தனக்கு திருமணமும் நடக்கவில்லை. தாய், தந்தையும் இல்லை. எனவே இந்த உலகில் இனி யாருக்காக வாழ வேண்டும் என்று ரவீந்திரன் வேதனை அடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு கீழ்குப்பம் சுடுகாட்டுக்கு சென்றார். அங்கு தாய்- தந்தையை புதைத்த இடத்தில், அதாவது இருவரது புதைகுழிக்கு நடுவில் ரவீந்திரன் விஷம் குடித்து விட்டு படுத்துக் கொண்டார்.
காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ரவீந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
தாய், தந்தை புைதகுழி அருகில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story