கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல்
கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல்
ஆம்பூர்
ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆம்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மருந்து கடை மற்றும் துணிக்கடையின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் பணிபுரிந்தது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறியதாக கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
மேலும் உமர் ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடைக்கு கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆம்பூர் தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story