தேங்கி கிடந்த நீரில் மூழ்கி சிறுமி பலி
ராஜபாளையத்தில் கோவிலுக்கு சென்ற போது ஆற்றில் தேங்கி கிடந்த நீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் கோவிலுக்கு சென்ற போது ஆற்றில் தேங்கி கிடந்த நீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அய்யனார் கோவில்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, கீழநிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், லாரி டிரைவர். இவருடைய மனைவி செல்வராணி. இவர்களின் குழந்தைகள் ஹாசினி (வயது4), குணா.
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவிலில் செல்வராணியின் சகோதரர் குழந்தைக்கு மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றனர். பின்பு அங்குள்ள ஆற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்றனர். அப்போது ஹாசினி, ஆற்றின் ஒரு பகுதியில் தேங்கியிருந்த நீரில் இறங்கி குளித்ததை யாரும் கவனிக்கவில்லை.
சிறுமி பலி
இதற்கிடையே ஹாசினி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தேங்கியிருந்த ஆற்று நீரில் இருந்து ஹாசினி உடலை மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story