அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம்


அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 1 Oct 2021 9:15 AM GMT (Updated: 1 Oct 2021 9:15 AM GMT)

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் த.மா.கா. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருக்கழுக்குன்றத்தில் வாக்குகளை சேகரித்தார்.

Next Story