தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சவேரியார் பாக்கியம். இவருடைய மகன் ஜேசு (வயது 37). இவரை முத்தையாபுரம் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். விளாத்திகுளம் சன்னதி தெருவைச் சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (45) என்பவரை சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர். இதே போன்று விளாத்திகுளம் குரலையம்பட்டியை சேர்ந்த உமையனன் மகன் கணேசமூர்த்தி (41) என்பவரை விளாத்திகுளம் போலீசார் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜேசு, ஜெயராஜ், கணேசமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
Related Tags :
Next Story