திண்டுக்கல்லில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவில் நிர்வாகி மயங்கி விழுந்து சாவு


திண்டுக்கல்லில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவில் நிர்வாகி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 1 Oct 2021 10:01 PM IST (Updated: 1 Oct 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவில் மன்ற நிர்வாகி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவில் மன்ற  நிர்வாகி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
பிறந்தநாள் விழா
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றம் சார்பில்  நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முன்பு நடந்த இந்த விழாவுக்கு மன்றத்தின் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். அதையடுத்து காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள், இலவச வேட்டி-சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மன்றத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான நிலக்கோட்டை அணைப்பட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 70) கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
மயங்கி விழுந்த நிர்வாகி
அப்போது திடீரென அவர் மயங்கி கீழே சரிந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்து தூக்கினர். பின்னர் அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்தில் கண்விழித்த அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் மீண்டும் மயக்க நிலைக்கு சென்றார்.
பின்னர் மருத்துவமனையில் டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிர்வாகி இறந்த சம்பவம் மன்ற நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story