ரூ.78 லட்சம் மோசடி சம்பவத்தில் கைதான திண்டிவனம் கிளை சிறை ஊழியர் பணியிடை நீக்கம்


ரூ.78 லட்சம் மோசடி சம்பவத்தில் கைதான திண்டிவனம் கிளை சிறை ஊழியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2021 4:54 PM GMT (Updated: 1 Oct 2021 4:54 PM GMT)

ரூ.78 லட்சம் மோசடி சம்பவத்தில் கைதான திண்டிவனம் கிளை சிறை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம்,

திண்டிவனம் கிளை சிறையில் ஊழியராக பணியாற்றி வரும் விக்கிரவாண்டி தாலுகா வி.சாத்தனூரை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவர், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு நேர்முக உதவியாளராக உள்ளதாகவும்,

 பண்ருட்டியை சேர்ந்த வேலாயுதம், சரோஜாவிடம் டிரைவராக இருப்பதாகவும் கூறி அவர்கள் இருவரும் மற்றும் முருகனின் அண்ணன் லோகநாதன் ஆகிய 3 பேரும் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 52 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.78 லட்சத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் திண்டிவனம் கிளை சிறை ஊழியரான முருகன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கடலூர் சிறைத்துறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story