புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி அங்கீகாரம் ரத்து


புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி அங்கீகாரம் ரத்து
x
தினத்தந்தி 1 Oct 2021 8:25 PM GMT (Updated: 1 Oct 2021 8:25 PM GMT)

போதிய இடவசதி இல்லாததால் புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி, அக்.2-
புதுச்சேரி கூட்டுறவு துறையின் மூலம் நடத்தப்படும் கல்வியியல் கல்லூரி கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 200-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் என்.சி.டி.இ. புதுடெல்லி ஆகிய நிறுவனங்களின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. 
தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் விதிகளுக்கு உட்பட்டு கல்லூரி கட்டிடம் மற்றும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இந்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் காலத்தோடு நடவடிக்கை எடுக்காததால் இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த முடியவில்லை. எனவே கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story