இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாருகால்கள் கடந்த பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தப்படாமல் மணல்மேவி கிடந்தது. இதனால் வாருகாலில் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்பட்டு மழைக் காலங்களில் வாருகாலில் உள்ள கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாருகால்கள் அனைத்தையும் சுத்தப்படுத்த நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றார். பின்னர் ஒவ்வொரு வாருகாலாக சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது நகரில் சாலைகளில் கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் சுத்தப்படுத்தப்படும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாகவும், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் இக்பால் தலைமை தாங்கினார். முனியசாமி, கலைவாசகன், டிமிட்ரோவ், ஜீவா, சமுத்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story