வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 38 பேருக்கு கொரோனா தொற்று
வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 7 பேர் பாதிக்கப்பட்டனர். எடப்பாடி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா ஒருவர், ஆத்தூர், ஓமலூர், சேலம் ஒன்றிய பகுதிகளில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டனர்.
நாமக்கல். தர்மபுரி, சென்னை, பெரம்பலூர், ஈரோடு, திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 38 பேர் என மொத்தம் 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 98 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 1,666 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story