மாவட்ட செய்திகள்

நான் பிச்சைக்காரி தான்; நடிகை விஜயலட்சுமி பேட்டி + "||" + actress vijayalakshmi announced a statement

நான் பிச்சைக்காரி தான்; நடிகை விஜயலட்சுமி பேட்டி

நான் பிச்சைக்காரி தான்; நடிகை விஜயலட்சுமி பேட்டி
நடிகை விஜயலட்சுமி தான் ஒரு பிச்சைக்காரி என்று கூறினார்.
பெங்களூரு: கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது தாயார் திடீரென மரணம்அடைந்தார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு சிலர் உதவி செய்தனர். எனக்கு அழுவதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. நான் கர்நாடகத்தில் பிச்சைக்காரி தான். எல்லாவற்றுக்கும் நான் பிச்சை எடுக்கிறேன். பிச்சை என்று நினைத்தாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். நடிகர்கள் சிவராஜ்குமார், யஷ் ஆகியோரிடம் பேசினேன். எனக்கு பலர் உதவி செய்தனர். எனது வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 350 வந்துள்ளது. இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.