தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2021 2:02 AM IST (Updated: 3 Oct 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

துவரங்குறிச்சி, அக்.3-
துவரங்குறிச்சி ஸ்டாலின் நகர் பகுதியை சேர்ந்தவர் வனிதா. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு 4 மகள், ஒரு மகன் உள்ளார். 3-வது மகள் சவித்தா (வயது 19). நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து  சவித்தாவை காணவில்லை. இந்தநிலையைில் முத்துக்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் சவித்தா தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. குடும்பத்தினர் அங்கு சென்றுபார்த்தபோது,  அவர்துப்பட்டாவால்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சவித்தா ஒரு கடிதம் எழுதி, அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் பெண் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தான் எனவும், அண்ணியிடம் என்னை பற்றி தவறாக செல்லி இருவரையும் பிரித்து வைத்து விட்டதோடு ஒரு ஆணின் பெயரை எழுதி அவரை காதலிக்க வற்புறுத்தினார் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story