அரசலூரை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


அரசலூரை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Oct 2021 2:07 AM IST (Updated: 3 Oct 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

அரசலூரை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேப்பந்தட்டை:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியை இரண்டாக பிரித்து அரசலூரை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசலூர் பஸ் நிறுத்தத்தில் பெரம்பலூர் செல்லும் டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஊராட்சியாக அன்னமங்கலம் ஊராட்சி உள்ளது. எனவே அரசலூர் மற்றும் ஈச்சங்காடு கிராமத்தை தனியாக பிரித்து அரசலூரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அரசலூர்-பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கைவிட்டு சென்றனர். மறியலால் அரசலூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story