லாரியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்


லாரியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2021 2:49 AM IST (Updated: 3 Oct 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே பழைய சாலையை பெயர்க்காமல் தார் ஊற்றியதால் லாரியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கூமாப்பட்டி அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து பெரியார் அணை வரை தற்போது புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஏற்கனவே சேதமுற்ற பழைய தார் சாலையை தோண்டாமல் அதன் மேலேயே புதிய தார் சாலை போடுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கூமாப்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய சாலையை தோண்டி ஜல்லிக்கற்கள் போட்டு புதிதாக சாலை அமைக்க வேண்டும் என போலீசாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முறைப்படி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story