தேர்தல் விதி மீறல்; பெண் வேட்பாளர் மீது வழக்கு


தேர்தல் விதி மீறல்; பெண் வேட்பாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Oct 2021 3:04 AM IST (Updated: 3 Oct 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதி மீறல் தொடர்பாக பெண் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி ஐயம்மாள் (வயது 45). இவர் சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். சம்பவத்தன்று இவர் முத்துநகர் பகுதியில் தேர்தல் விதிகள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தது. 
இதனைதொடர்ந்து களக்காடு ஒன்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி லுக்மானுல் ஹக்கீம் தலைமையிலான அதிகாரிகள் சென்று சோதனையிட்டனர். அப்போது வேட்பாளர் ஐயம்மாள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அதிகாரிகள் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறியும் அவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி லுக்மானுல் ஹக்கீம் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், வேட்பாளர் ஐயம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story