மாவட்ட செய்திகள்

லாரியில் சரள் மண் கடத்தல்; 2 பேர் கைது + "||" + Gravel soil smuggling; 2 people arrested

லாரியில் சரள் மண் கடத்தல்; 2 பேர் கைது

லாரியில் சரள் மண் கடத்தல்; 2 பேர் கைது
கடையம் அருகே லாரியில் சரள் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையம்- பாவூர்சத்திரம் விலக்கு பகுதியில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் குண்டுக்கல் எடுத்துச் செல்வதற்கான அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி முக்கூடலில் இருந்து அரியப்பபுரத்திற்கு சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து முப்புலியூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் சிவன் வைத்திலிங்க ராஜா (வயது 28), புங்கம்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (25) இருவர் மீதும் கடையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது
சங்கரன்கோவிலில் போலீசாரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. காரில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா சிக்கியது; 2 பேர் கைது
புளியரை அருகே தெலுங்கானாவில் இருந்து காரில் 70 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
தென்காசியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
5. மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.