மாவட்ட செய்திகள்

திருமுல்லைவாயல், ஆவடி பகுதிகளில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு + "||" + DGP Sylendra Babu inspect in Thirumullaivoyal and Avadi areas

திருமுல்லைவாயல், ஆவடி பகுதிகளில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு

திருமுல்லைவாயல், ஆவடி பகுதிகளில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு
தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேற்று காலை திருமுல்லைவாயல் பகுதியில் 5-ம் பட்டாலியனில் கட்டப்பட்டு வரும் போலீசாருக்கான திருமண மண்டபம் மற்றும் போலீஸ் குடியிருப்பு கட்டிட பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் 13-வது பட்டாலியனில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும் ஆய்வு செய்து கூடுதல் கட்டிடத்துக்கான கல்வெட்டை அவர் திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த போலீசாருக்கான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். அந்த மைதானத்தின் ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன், அங்குள்ள குளத்தில் மீன் குஞ்சுகளையும் விட்டார்.

அதைதொடர்ந்து ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மைய வளாகத்தில் ரூ.27.2 கோடியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கென புதிதாக கட்டப்பட்டு வரும் 4 மாடி கட்டிட பணிகளையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.