மாவட்ட செய்திகள்

மறைமலைநகர், பொத்தேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை; 3 பேர் கைது + "||" + Sale of cannabis in Maraimalai Nagar, Potheri areas; 3 people arrested

மறைமலைநகர், பொத்தேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை; 3 பேர் கைது

மறைமலைநகர், பொத்தேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை; 3 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு திருக்கச்சூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அழகேசன் (வயது 26), என்பவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதற்காக நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அழகேசனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.அதேபோல பொத்தேரி ஏரிக்கரை அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதற்கு நின்றுகொண்டிருந்த காட்டாங்கொளத்தூர் குட்டி என்கிற ராகவேந்திரன் (50), காவனூர் சதீஷ்குமார் (23), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. நேரடி தேர்வுகள் நடத்த எதிர்ப்பு: மதுரையில் கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது
நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
2. வாலிபரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது
வாலிபரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கஞ்சா விற்ற 3 பேர் கைது
பணகுடி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. திருத்தணி அருகே செம்மரம் வெட்ட சென்ற 5 பேர் கைது
திருப்பதிக்கு செம்மரம் வெட்ட சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை திருத்தணி அருகே போலீசார் கைது செய்தனர்.
5. வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.