மாவட்ட செய்திகள்

ஏரியூர் அருகே மொபட் மீது வேன் மோதி தொழிலாளி சாவு + "||" + Worker death

ஏரியூர் அருகே மொபட் மீது வேன் மோதி தொழிலாளி சாவு

ஏரியூர் அருகே மொபட் மீது வேன் மோதி தொழிலாளி சாவு
ஏரியூர் அருகே மொபட் மீது வேன் மோதி தொழிலாளி இறந்தார்.
ஏரியூர்,

ஏரியூர் அருகே உள்ள புதுநாகமரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது45) கூலித்தொழிலாளி. இவருக்கு வீரம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். வீரம்மாள் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  கடந்த மாதம் 12-ந் தேதி, சுப்பிரமணி மொபட்டில் ஏரியூர் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த வேன் மோதியது. 

இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சொக்கம்பட்டி அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
2. தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி சாவு
வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. கட்டிட தொழிலாளி சாவு
மோட்டாரை இயக்க சென்ற கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
4. மின்னல் தாக்கி தொழிலாளி பலி
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
5. தீக்காயம் அடைந்த தொழிலாளி சாவு
திருச்செந்தூரில் தீக்காயம் அடைந்த தொழிலாளி இறந்தார்.