பாஜக பெற்றெடுக்கும் குழந்தைக்கு திமுக பெயர் வைக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச்சு
பா.ஜ.க. பெற்றெடுக்கும் குழந்தைக்கு தி.மு.க. பெயர் வைப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.
பேரணாம்பட்டு
பா.ஜ.க. பெற்றெடுக்கும் குழந்தைக்கு தி.மு.க. பெயர் வைப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.
வாக்கு சேகரிப்பு
பேரணாம்பட்டு ஒன்றியம் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் பா.ஜ.க. சார்பில் ஒன்றிய குழு உறுப்பினருக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வந்தார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றனங்களா?. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுத்தாங்களா. தி.மு.க. ஆட்சி நடக்குது. இங்க இருக்கிற பெண்கள் எல்லாம் தங்கள் சுருக்கு பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கல்விக்கடன், நகைக்கடன் ரத்து என்றார்கள் எதையும் செய்யவில்லை. அதனால் தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீர்கள். முதல்-அமைச்சர் ஸ்டாலின் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள சைக்கிளில் போறாரு.
தி.மு.க. பெயர் வைக்கிறது
2023-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பாலாற்றை பாழாக்கி விட்டார்கள். ஜல் ஜீவன் திட்டம் மூலம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் இந்த பகுதிக்கு பா.ஜ.க. அரசு மூலம் கொண்டு வரப்படும்.
குழந்தை பெற்றெடுப்பது பா.ஜ.க. அதற்கு போட்டி போட்டு தி.மு.க. பெயர் வைக்கிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து ரூ.35 குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை. இந்து கோவில்கள் மூடப்பட்டுள்ளதை திறக்கக் கோரி வருகிற 7-ந் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story