பள்ளவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?


பள்ளவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 3 Oct 2021 6:49 PM GMT (Updated: 3 Oct 2021 6:49 PM GMT)

தவுட்டுப்பாளையம் அருகே பள்ளவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நொய்யல்
பள்ளவாய்க்கால்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகேபாலத்துறை அருகாமையில் புகளூர் வாய்க்காலில் இருந்து பள்ள வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் மூலம் புகழூர், தவுட்டுப்பாளையம் நஞ்சை புகளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். பள்ளவாய்க்காலில் வரும் தண்ணீர் மூலம் விவசாயிகள் கரும்பு, வாழை, கொடிக்கால், கோரை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ள வாய்க்கால் நெடுகிலும் ஏராளமான தண்ணீர் தாமரைகள், பல்வேறு வகையான செடி, கொடிகள் அடர்ந்து முளைத்து ஆக்கிரமித்துள்ளன. 
கடைமடை வரை தண்ணீர்
இதனால் பள்ள வாய்க்காலில் செல்லும் தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பணப் பயிர்களுக்கு அதிக அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ள வாய்க்காலில் முளைத்துள்ள தண்ணீர் தாமரைகள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி தண்ணீர் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story